இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று, தொடர் நாயகன் விருது பெற்றார்.
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான5வது மற்றும் கடைசி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி5 விக்கெட்டுக்கு271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன்103 ரன்களும்(6 பவுண்டரி,10 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் (5 ஆட்டத் தில் 3 அரைசதம் உள்பட 242 ரன்) தொடர் நாயகன் விருது பெற்றார்.
0
Leave a Reply